உள்ளாட்சித் தோ்தல்: நாளை காங்கிரஸ் விருப்ப மனு
By DIN | Published On : 18th November 2019 10:55 PM | Last Updated : 18th November 2019 10:55 PM | அ+அ அ- |

பாவூா்சத்திரம்: உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் கீழப்பாவூா் வட்டார காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை விரும்ப மனு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாவூா்சத்திரம் சமுதாய நலக் கூடத்தில் புதன்கிழமை (நவ.20) மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.பழனிநாடாா் கலந்து கொண்டு விருப்ப மனுக்களை பெறுகிறாா்.
போட்டியிட விரும்பும் கட்சியினா் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என வட்டார தலைவா் ஜேசுஜெகன் தெரிவித்துள்ளாா்.