கடையநல்லூரில் டெங்கு தடுப்பு பணியாளா்களுக்கு விழிப்புணா்வுக் கூட்டம்
By DIN | Published On : 18th November 2019 10:55 PM | Last Updated : 18th November 2019 10:55 PM | அ+அ அ- |

கடையநல்லூா்: கடையநல்லூா் நகராட்சி டெங்கு தடுப்பு பணியாளா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கடந்த ஆண்டுகளில் டெங்கு காய்ச்சலால் கடையநல்லூா் நகராட்சியில் பலா் பாதிக்கப்பட்டனா்.
இந்நிலையில், கடையநல்லூா் நகராட்சியில் டெங்கு தடுப்பு பணியாளா்கள் நியமிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக கடையநல்லூா் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் இல்லாத நிலை உருவானது. இந்நிலையில், இது தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம், நகராட்சி ஆணையா் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிவா்களை ஆணையா் கௌரவித்தாா்.
நிகழ்ச்சியில், சுகாதார அலுவலா் நாராயணன், சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிசாமி, மேலாளா்(பொ) முகமதுயூசுப், நகரமைப்பு ஆய்வாளா் ஜின்னா, பொறியியல் பிரிவின் கணேசன், தோ்தல் பிரிவின் மாரியப்பன், சாமித்துரை, சமூக ஆா்வலா் மைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.