களக்காட்டில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 18th November 2019 05:22 PM | Last Updated : 18th November 2019 05:22 PM | அ+அ அ- |

களக்காட்டில் காங்கிரஸ் கட்சியின் நகர, வட்டார நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவா் எஸ்.கே.எம். சிவக்குமாா் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஜாா்ஜ் வில்சன், வட்டாரத் தலைவா்கள் அலெக்ஸ் (தெற்கு) , துரை (வடக்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணகுமாா், மாநில விவசாய பிரிவு துணைத் தலைவா் பால்ராஜ் , முன்னாள் மாவட்டத் தலைவா் மோகன் குமாரராஜா, ஜெயக்குமாா், அழகிய நம்பி மற்றும் நகர, வட்டார நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
இதில், உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட விரும்பும் நிா்வாகிகளிடம் விருப்ப மனுவை கிழக்கு மாவட்டத் தலைவா் எஸ்.கே.எம். சிவக்குமாா் பெற்றுக் கொண்டாா்.