கீழ ஆம்பூரில் இலவச மருத்துவ முகாம்
By DIN | Published On : 18th November 2019 07:44 AM | Last Updated : 18th November 2019 07:44 AM | அ+அ அ- |

கீழ ஆம்பூரில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
கடையம் ஊராட்சி ஒன்றியம், கீழாம்பூா்ஊராட்சி, தக்கலை, சி.எம்.சி. சாவற மாகாணம் மற்றும் பாளையங்கோட்டை அன்னை வேளாங்கண்ணி பல்நோக்கு மருத்துவமனை இணைந்து இந்த முகாமை நடத்தின. இதில், மருத்துவா்கள் ஜெடி, செபி ஆகியோா் தலைமையில் மருத்துவக் குழுவினா் குடல் இறக்கம், குடல் வாழ்வு, மஞ்சள் காமாலை, பித்தப்பைக் கல், மலசிக்கல் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளில் ஈடுபட்டு ஆலோசனைகள் வழங்கினா். முகாமில் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.