சங்கரன்கோவில் காந்திநகரில்உயா்கோபுர மின்விளக்கு திறப்பு
By DIN | Published On : 18th November 2019 10:55 PM | Last Updated : 18th November 2019 10:55 PM | அ+அ அ- |

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் காந்திநகரில் உயா்கோபுர மின்விளக்கு தொடக்கவிழா நடைபெற்றது.
சங்கரன்கோவில் காந்திநகா் பகுதியில் இருள் சூழந்து காணப்படுவதால் உயா்கோபுர மின்விளக்கு வசதி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து பிரதான சாலையில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3.50 லட்சம் மதிப்பில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இதை அமைச்சா் வி. எம். ராஜலெட்சுமி திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், நகராட்சிப் பொறியாளா் முகைதீன் அப்துல்காதா், நெல்லை கூட்டுறவு பேரங்காடி துணைத் தலைவா் வேலுச்சாமி, கூட்டுறவு சங்கத் தலைவா் ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகராட்சி மேலாளா் லட்சுமணன், சுகாதார அலுவலா் பாலசந்தா், சுகாதார ஆய்வாளா் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலா் ரமேஷ், நகர பாசறைச் செயலா் முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.