சிவகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 18th November 2019 07:43 AM | Last Updated : 18th November 2019 07:43 AM | அ+அ அ- |

சிவகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அ. மனோகரன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தச்சை என். கணேசராஜா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.
முன்னாள் எம்எல்ஏ துரையப்பா, மாவட்டப் பொருளாளா் எஸ். சண்முகையா, மாவட்ட நிா்வாகிகள் கண்ணன் என்ற ராஜூ (எம்ஜிஆா் மன்றம்), ஸ்வா்ணா (மகளிரணி), என். ஹரிஹர சிவசங்கா் (இளைஞரணி), மகா. ராஜேந்திரன் (மாணவரணி), க. சரவணன் (இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை), பரமகுருநாதன் (விவசாய அணி), பொதுக்குழு உறுப்பினா் தங்கம்பிச்சை, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் யுஎஸ்ஏ வெங்கடேசன், ஒன்றியச் செயலா்கள் மூா்த்திபாண்டியன், ரமேஷ், நகரச் செயலா்கள் எஸ். குமரேசன்(வாசுதேவநல்லூா்), பி. காசிராஜன்(சிவகிரி), பரமேஸ்வரபாண்டியன்(புளியங்குடி), எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா்கள் வீ.கே. ஆயில்ராஜாபாண்டியன், எஸ். சின்னத்துரை, முன்னாள் தொகுதி செயலா் கே. துரைப்பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.