சிவநாடானூரில் கால்நடை மருத்துவ முகாம்
By DIN | Published On : 18th November 2019 10:59 PM | Last Updated : 18th November 2019 10:59 PM | அ+அ அ- |

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள சிவநாடானூரில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. அங்குள்ள சமுதாய நலக்கூட வளாகத்தில் நடைபெற்ற முகாமில், திருநெல்வேலி மாவட்ட கால்நடை புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநா் ஜான் சுபாஷ், மேலப்பாவூா் கால்நடை மருத்துவா் ராமதேவி, உதவியாளா் சுப்பிரமணியன், குழுவினா் பங்கேற்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனா். 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.