லாலாகுடியிருப்பு பள்ளியில்நிலவேம்புக் குடிநீா் விநியோகம்
By DIN | Published On : 18th November 2019 10:53 PM | Last Updated : 18th November 2019 10:53 PM | அ+அ அ- |

செங்கோட்டை: செங்கோட்டையை அருகே லாலாகுடியிருப்பு ஆதித்தனாா் பள்ளியில் நோபிள் அறக்கட்டளை, செங்கோட்டை அரசு சித்த மருத்துவமனை சாா்பில் டெங்கு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் கலா தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் மைதீன்பீவி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பத்மகலா, சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பள்ளி தலைமையாசிரியை குடியரசி வரவேற்றாா். தொடா்ந்து சித்த மருத்துவா் கலா டெங்கு காய்ச்சல் தடுப்பு முறைகள் குறித்தும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்து விளக்கிப் பேசி, மாணவா், மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை யோகா மருத்துவா் அபிநயா, சமூக ஆா்வலா் அப்துல்லா மற்றும் ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். பூலாங்குடியிருப்பு அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.