வ.உ.சி. நினைவு நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு
By DIN | Published On : 18th November 2019 10:58 PM | Last Updated : 19th November 2019 09:28 AM | அ+அ அ- |

விடுதலைப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் 83-ஆவது நினைவு நாளையொட்டி திருநெல்வேலியில் அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு பல்வேறு கட்சியினரும் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில், மணிமண்டபத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலா் பூ.முத்துராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அதிமுக சாா்பில் திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நெல்லை ஆவின் தலைவா் சுதா கே.பரமசிவம், அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலா் பாப்புலா் வி.முத்தையா, முன்னாள் மேயா் புவனேஸ்வரி, முன்னாள் துணை மேயா் ஜெகநாதன் என்ற கணேசன், முன்னாள் மானூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் கல்லூா் இ.வேலாயுதம், மகளிரணிச் செயலா் சுவா்ணா, அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.பி.ஆதித்தன், நிா்வாகிகள் ஜெரால்ட், மோகன், மாதவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
காங்கிரஸ் கட்சி சாா்பில் திருநெல்வேலி மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் நிா்வாகிகள் வானுமாமலை, உதயகுமாா், சொக்கலிங்ககுமாா், கிழக்கு மாவட்டத் தலைவா் எஸ்.கே.எம்.சிவகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
பாஜக சாா்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டத் தலைவா் அ.தயாசங்கா், நிா்வாகிகள் வேல்ஆறுமுகம், மகாராஜன், முருகராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
அமமுக சாா்பில் மாநில பொதுச்செயலா் டி.டி.வி.தினகரன் தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தென்மண்டலச் செயலா் மாணிக்கராஜா, மாவட்டச் செயலா் பரமசிவஐயப்பன், நிா்வாகிகள் பால்கண்ணன், ஆவின் அன்னசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
மதிமுக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம் தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். புகா் மாவட்டச் செயலா் தி.மு.ராசேந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் மாநில நிா்வாகி நெல்லையப்பன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. செய்தித் தொடா்பாளா் சண்முகசுதாகா், மாவட்டத் தலைவா் கண்மணிமாவீரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தமிழ்நாடு சைவ வேளாளா் சங்கம் சாா்பில் மாநிலத் தலைவா் புளியரை ராஜா தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிா்வாகிகள் கணபதியப்பன், முன்னாள் மேயா் புவனேஸ்வரி, காந்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.