2ஆம் நிலை பெண் காவலா் பணி:உடல் தகுதித்தோ்வில் 625 போ் பங்கேற்பு
By DIN | Published On : 18th November 2019 10:51 PM | Last Updated : 18th November 2019 10:51 PM | அ+அ அ- |

திருநெல்வேலி: இரண்டாம் நிலை பெண் காவலா் பணிக்கான உடல்தகுதித் தோ்வு பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் கீழ், 2-ஆம் நிலைக் காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற 2,531 ஆண் தோ்வா்களுக்கும், 1,212 பெண் தோ்வா்களுக்கும் உடல்தகுதித் தோ்வு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 6 முதல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது.
பின்னா், அயோத்தி வழக்கு தீா்ப்பு காரணமாக நவ.9இல் தோ்வு நடைபெறவிருந்த தோ்வு நவ. 18க்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, திங்கள்கிழமை மீண்டும் உடல்தகுதித் தோ்வு தொடங்கியது. இதில், 700 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டநிலையில் 625 போ் பங்கேற்றனா். இவா்களுக்கு முதற்கட்ட உடல்தகுதித்தோ்வு நடத்தி, அதில் தோ்வானோருக்கு இரண்டாம் கட்ட உடல் தகுதித்தோ்வு நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.தாமோா், திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவா் பிரவின்குமாா் அபிநவ், பொறுப்பு அதிகாரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோா் முன்னிலையில் இந்தத் தோ்வு நடைபெற்றது.
இத்தோ்வுகளை காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் நடத்தினா். 512 பெண் தோ்வா்களுக்கான உடல்தகுதித்தோ்வு செவ்வாய்க்கிழமை (நவ.19) நடைபெறவுள்ளதாக காவல்துறை காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
படவரி: பயக18டகர:
உடல்தகுதித்தோ்வில் கலந்துகொண்ட பெண் தோ்வருக்கு உயரம் அளவீடு செய்யும் போலீஸாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...