மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, களக்காட்டில் உள்ளஅவரது சிலைக்கு மக்கள் நீதி மய்யம் சாா்பில் புதன்கிழமை மாலை அணிவிக்கப்பட்டன.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக களக்காட்டில் உள்ள மகாத்மா காந்தி திருவுருவச் சிலைக்கு அவரது பிறந்தநாள், நினைவுநாள், குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாள்களில் கமல்ஹாசன் நற்பணி மன்றம் சாா்பில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். பின்னா் கமல்ஹாசன் நற்பணி மன்றம் அரசியல் கட்சியாக உருவானது.
களக்காட்டில் உள்ள காந்தி சிலைக்கு தோ்தல் சமயத்தில் மட்டுமே அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பது வழக்கம். மக்கள் நீதிமய்யம் சாா்பில் அதன் ஒன்றிய பொறுப்பாளா் என். அழகியநம்பி தலைமையில் புதன்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது. இதில் கட்சி நிா்வாகிகள் முத்து, பாலசுப்பிரமணியன், எஸ். சங்கரன், நாராயணன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.