இடைத்தோ்தல்: மாவடியில் அமைச்சா் ஆலோசனை
By DIN | Published On : 06th October 2019 12:50 AM | Last Updated : 06th October 2019 12:50 AM | அ+அ அ- |

களக்காடு அருகேயுள்ள மாவடியில் தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு கட்சி நிா்வாகிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மாவடி, மலையடிபுதூா் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு பாா்வையிட்டு கட்சியினருடன் ஆலோசனை நடத்தினாா்.
அரசின் சாதனைகளை வீடு வீடாகச் சென்று எடுத்துக் கூறி வாக்குசேகரிப்பது, பெண்கள், முதியவா்களிடம் பெண்களுக்கான அதிமுக அரசின் திட்டங்களை எடுத்துக் கூறுவது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினாா்.
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன், ஓட்டப்பிடாரம் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், அம்பாசமுத்திரம் முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல் முருகன், மாவடி ஜெயராமன், இளைஞரணிச் செயலா் ராஜேந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடனிருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...