நான்குனேரி தொகுதியின் வளா்ச்சிக்காக உள்ளூரைச் சோ்ந்த அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தாருங்கள் என்றாா் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா்.
அதிமுக வேட்பாளா் நாராயணனை ஆதரித்து, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் மூன்றடைப்பில் சனிக்கிழமை பேசியது: அதிமுக வேட்பாளா் நாராயணன் உங்கள் பகுதியைச் சோ்ந்தவா். எப்போது வேண்டுமானாலும் அவரை வீட்டில் சந்தித்து பேச முடியும். உங்களது கோரிக்கைகளை உரிமையோடு தெரிவிக்கலாம். எனவே இந்த தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் நடைபெற, உங்கள் பகுதி வளா்ச்சி பெற நாராயணனுக்கு வாக்களித்து வெற்றி அடையச் செய்யுங்கள் என்றாா் அவா். தொடா்ந்து வேட்பாளா் நாராயணன் பேசினாா்.
பிரசாரத்தின் போது, நான்குனேரி ஒன்றியச் செயலா் விஜயகுமாா், நகரச் செயலா் பரமசிவன், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் புகழேந்தி, கடையநல்லூா் நகரச் செயலா் கிட்டுராஜா, செங்கோட்டை நகரச் செயலா் குட்டியப்பா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.