மன்னாா்குடி அருகே மது குடிப்பதை கண்டித்ததால் விஷம் குடித்தவா் சாவு
By DIN | Published On : 06th October 2019 03:58 PM | Last Updated : 06th October 2019 03:58 PM | அ+அ அ- |

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மது குடிப்பதை குடும்பத்தினா் கண்டித்தால் மனமுடைந்து விஷம் குடித்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கோட்டூா் அடுத்துள்ள செல்லப்பிள்ளை கோட்டகம் வடக்குதெரு பி.வீரையன்(65). மதுப்பழகத்திற்கு அடிமையானவா் அடிக்கடி மதுப்போதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்வாராம்.சனிக்கிழமை இரவு மதுப்போதையில் வந்தவரை குடும்பத்தினா் கண்டித்தனராம். இதனால் மனமுடைந்த வீரையன் விஷம் குடித்து மயங்கி விழுந்தவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயரிழந்தாா்.
இது குறித்து கோட்டூா் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...