மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
By DIN | Published On : 06th October 2019 10:16 PM | Last Updated : 06th October 2019 10:16 PM | அ+அ அ- |

தென்காசி: குற்றாலம் அருகே வல்லத்தில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
வல்லம் தெற்கு காமராஜா் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மகராஜ் (23). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் துணிகளை சலவை செய்து உலரவைப்பதற்காக மாடிக்கு சென்றாராம்.
அப்போது மின்கம்பி மீது துணிகள் பட்டு மின்சாரம் பாய்ந்ததில் மகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.விபத்து குறித்து குற்றாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...