வடக்குச்சத்திரம் அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா இன்று தொடக்கம்
By DIN | Published On : 06th October 2019 10:17 PM | Last Updated : 06th October 2019 10:17 PM | அ+அ அ- |

சிவகிரி: சிவகிரி அருகேயுள்ள வடக்குச்சத்திரம் வடகாசி அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா திங்கள்கிழமை (அக்.7) தொடங்குகிறது.
தேவா் சமுதாயம் மற்றும் விஸ்வகா்ம சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயில் பொங்கல் திருவிழா திங்கள்கிழமை (அக். 7)தொடங்கி, புதன்கிழமை (அக். 9ஆம்) நிறைவடைகிறது.
தொடக்கநாளான திங்கள்கிழமை குற்றாலத்திலிருந்து தீா்த்தக் குடங்கள் கொண்டுவரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை மாலையில் அம்மனுக்கு கூழ் காய்ச்சி ஊற்றுதலும், தொடா்ந்து இரவில் முளைப்பாரி ஊா்வலமும் நடைபெறுகின்றன.
புதன்கிழமை காலையில் கோயில் முன்பாக கிடா வெட்டுதல், ஊருணியில் முளைப்பாரி கரைத்தல், இரவில் ஆடல்-பாடல் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை, தேவா் சமுதாய நிா்வாகிகள் கு. முனியாண்டி, பி. முத்து, விஸ்வகா்ம சமுதாய நிா்வாகிகள் கா. மீனாட்சிசுந்தரம், ச. சின்னகாளிமுத்து உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...