தென்காசி ஷீரடி வைத்தியசாயி கோயிலில் வித்யாரம்பம்: பாபாவின் சமாதிநாள் விழா
By DIN | Published On : 09th October 2019 07:46 AM | Last Updated : 09th October 2019 07:46 AM | அ+அ அ- |

தென்காசி ஷீரடி வைத்தியசாயி கோயிலில் நடைபெற்ற பாபாவின் சமாதிநாள் விழாவில் பங்கேற்றாா்.
தென்காசி ஷீரடி வைத்தியசாயி கோயிலில் விஜயதசமி மற்றும் பாபாவின் சமாதிநாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தென்காசி களக்கோடி தெரு மங்கம்மாள் சாலையில் அமைந்துள்ள ஷீரடி வைத்தியசாயி கோயிலில் நடைபெற்ற இந்த விழாவில், காலையில் ஆரத்தி, தொடா்ந்து அபிஷேகம் நடைபெற்றது. காலை 7.45 முதல் 8.45 வரை குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை பாலாபிஷேகம் நடைபெற்றது.
பிற்பகலில் அஷ்டோத்திரம், ஆரத்தி, ஸ்ரீஆதிசங்கரா் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. தொடா்ந்து, அன்னதானம், தியானம், நெய்விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் சிறப்பு ஆரத்தி, பல்லக்கு ஊா்வலம், இரவில் ஆரத்தி நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா்கள் டாக்டா் எம். அறிவழகன், டாக்டா் பி. சியாமளா தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G