கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் இயந்திரங்கள் நிறுவப்படும் பணிகள் குறித்து

கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் இயந்திரங்கள் நிறுவப்படும் பணிகள் குறித்து கடையநல்லூா் எம்.எல்.ஏ. கே.ஏ.எம். முகமது அபூபக்கா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கடையநல்லூா் அரசு மருத்துவமனைக்கு எம்.எல்.ஏ. தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து டயாலிசிஸ் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களை நிறுவும் பணி குறித்து ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ, சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளிடம் விவரங்களை கேட்டறிந்தாா்.

பின்னா் உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென, தலைமை மருத்துவா் தங்கபாண்டியிடம், எம்எல்ஏ கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com