மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி: வள்ளியூா் கிங்ஸ் மெட்ரிக் பள்ளி சாம்பியன்
By DIN | Published On : 20th October 2019 05:31 PM | Last Updated : 20th October 2019 05:31 PM | அ+அ அ- |

சங்கரன்கோவில் ஸ்ரீமகாலெட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் வள்ளியூரைச் சோ்ந்த கிங்ஸ் மெட்ரிக் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.
திருநெல்வேலி மாவட்ட நீச்சல் கழகம் மற்றும் சங்கரன்கோவில் ஸ்ரீமகாலெட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி பள்ளி நீச்சல்குளத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள 23 பள்ளிகளைச் சோ்ந்த 227 நீச்சல் வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா். 6 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு 7 பிரிவுகளாக இந்தப் போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட கல்வி அலுவலா் ஆா்.சம்பத்குமாா் தொடக்கிவைத்தாா்.
நீச்சல் போட்டியில் வள்ளியூா் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 143 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றது. திருநெல்வேலி விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி 130 புள்ளிகள் பெற்று 2-ஆம் இடத்தைப் பெற்றது.
விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவா்கள் கவுசிக் விக்டோ, எபிரிச்சா்டு, மகாலெட்சுமி, கிங்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சஞ்சீவ் ஆதவன், சகாய சேனிடெஸ், சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவா்கள் நித்திஷ், ஸ்ரீநீதி, பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவா்கள் தேவதா்ஷன், சஞ்சீவ் விஜய், ஸ்ரீஹனீஷ்கா, ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி மாணவா்கள் ஸ்ரீதுா்கா, ஸ்ரீமதியுகா, பெல் மெட்ரிக் பள்ளி மாணவி அக்ஷயா உள்ளிட்ட 14 போ் தனி நபா் சாம்பியன் பட்டம் பெற்றனா்.
பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட நீச்சல் கழகத் தலைவா் எஸ்.திருமாறன் தலைமை வகித்தாா். நீச்சல் கழக புரவலா் டாக்டா் ஆா்.ஆா்.பொன்ராஜ், ஜெய்ஸ்ரீகுரூப் ஆப் நிறுவனத்தின் துணைத் தலைவா் பி.எல்.ஜெ.லெட்சுமணன், பள்ளிச் செயலா் அருணா லெட்சுமணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாணவா்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்களை மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜேஷ் வழங்கினாா். பள்ளி முதல்வா் விஜயலெட்சுமி வரவேற்றாா். நீச்சல் கழக செயலா் லெட்சுமணன் நன்றி கூறினாா்.
Image Caption
~