அமமுக வேண்டுகோள்
By DIN | Published On : 01st September 2019 05:11 AM | Last Updated : 01st September 2019 05:11 AM | அ+அ அ- |

மாமன்னன் பூலித்தேவரின் 304 ஆவது பிறந்த நாள் விழாவில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட அமமுக பொறுப்பாளர் பொய்கை சோ.மாரியப்பன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய சுதந்திரப் போராட்ட முதல் வீரர் மாமன்னர் பூலித்தேவரின் பிறந்த தின விழா வாசுதேவநல்லூர் அருகேயுள்ள நெல்கட்டும்செவலில் ஞாயிற்றுக்கிழமை(செப்.1) கொண்டாடப்படுகிறது. அங்கு அவரது சிலைக்கு பொதுச் செயலர் டிடிவி தினகரன் மற்றும் கட்சியினர் மாலை 3 மணிக்கு மரியாதை செலுத்துகின்றனர். இதற்காக வருகை தரும் பொதுச் செயலருக்கு, சங்கரன்கோவில், புளியங்குடி சாலையிலுள்ள ரயில்வே கேட் அருகே கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. வரவேற்பு நிகழ்ச்சியிலும், விழாவிலும் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.