நெல்லையில் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
By DIN | Published On : 29th September 2019 03:24 AM | Last Updated : 29th September 2019 03:24 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாநகரில் நகைப்பறிப்பு, பொதுமக்களை அச்சுறுத்துதல் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
பாளையங்கோட்டை, மேலப்பாளையம் பகுதிகளில் நகைப் பறித்தல், பொதுமக்களை அச்சுறுத்துதல், பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த மேலப்பாளையம் ஆசூரான் கிழக்கு தெருவைச் சேர்ந்த செய்யது மகன் சம்சுதீன், கணேசபுரத்தைச் சேர்ந்த செல்லத்துரை மகன் சூரி என்ற சுரேஷ் ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) மகேஷ் குமார், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஜி.வெங்கடகிருஷ்ணன், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பூ.ஜெயலெட்சுமி ஆகியோரின் பரிந்துரையின்பேரில், சும்சுதீன், சுரேஷ் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.டாமோர் உத்தரவிட்டார்.