பணகுடியில் 2,000 பனை விதைகள் நடவு
By DIN | Published On : 29th September 2019 03:17 AM | Last Updated : 29th September 2019 03:17 AM | அ+அ அ- |

பணகுடி திருஇருதய மேல்நிலைப் பள்ளி, வட்டார விவசாயிகள் சங்கம் சார்பில் வீரபாண்டிகுளத்தில் 2,000 பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.
திருஇருதய நடுநிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், விவசாயிகள் பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டனர். இப்பணியை திருநெல்வேலி நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட அலுவலர் தேவபிச்சை தொடங்கி வைத்தார்.
பள்ளித் தலைமையாசிரியர் அந்தோணி சாமி, கலந்தபனை அன்பு இல்ல இயக்குனர் அன்பு ஆகியோர் தலைமை வகித்தனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ், உதவி தலைமையாசிரியர் ரெக்ஸ், ஆசிரியர் வின்சென்ட், சமூக ஆர்வலர் அமலன், திட்ட அலுவலர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், தண்டையார்குளத்தில் மகேந்திரகிரி பாரம்பரிய விவசாய கூட்டமைப்பினருடன் இணைந்து 1,000 பனை விதைகள் நடப்பட்டன.