நெல்லை, தென்காசியில் நிரம்பி வரும் அணைகள்: 100 அடியை நெருங்கும் பாபநாசம் 

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஒரு வாரமகப் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள
நெல்லை, தென்காசியில் நிரம்பி வரும் அணைகள்: 100 அடியை நெருங்கும் பாபநாசம் 

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஒரு வாரமகப் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை ஒருவாரம் தாமதமாகத் தொடங்கிய நிலையில் போதிய சாரல் மழை இல்லாமல் இருந்தது. ஆக. 2 முதல் தென்மேற்குப் பருவ மழைத் தீவிரமடைந்து மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்தததையடுத்து மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 
ஆக. 10 திங்கள்கிழமை காலை 7 மணிவரை உள்ள 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 4 மி.மீ., சேர்வலாறில் 3 மி.மீ., மணிமுத்தாறில் 5 மி.மீ., நம்பியாறில் 5 மி.மீ., கொடுமுடியாறில் 5. மி.மீ., அம்பாசமுத்திரத்திரத்தில் 10.40 மி.மீ., சேரன்மகாதேவியில் 2 மி.மீ., நாங்குநேரியில் 5 மி.மீ., பாளையங்கோட்டையில் 2.40 மி.மீ., ராதாபுரத்தில் 20 மி.மீ., திருநெல்வேலியில் 4 மி.மீ மழைப்பதிவாகியிருந்தது.

தென்காசி மாவட்டத்தில் கடனாநதியில் 16 மி.மீ., ராமநதியில் 8 மி.மீ., கருப்பா நதியில் 5 மி.மீ., குண்டாறில் 25 மி.மீ., அடவிநயினார் அணையில் 18 மி.மீ., ஆய்குடியில் 4.20 மி.மீ., தென்காசியில் 5.20 மி.மீ., செங்கோட்டையில் 7 மி.மீ., சங்கரன்கோவிலில் 8 மி.மீ., சிவகிரியில் 10 மி.மீ. மழைப் பதிவாகியிருந்தது.
143 அடி நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 97.20 அடியாகவும் அணையில் நீர்வரத்து 4379.17 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் 804.75 கன அடியாகவும் இருந்தது. 156 அடி நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 129.66 அடியாக இருந்தது. 118 அடி நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 72.60 அடியாக இருந்தது. அணையில் நீர்வரத்து 499 கன அடியாகவும் வெளியேற்றம் 55 கன அடியாகவும் இருந்தது. 52.50 அடி நீர்மட்டம் கொடுமுடியாறு அணையில் நீர்மட்டம் 43 அடியாகவும் நீர்வரத்து 41 கன அடியாகவும் இருந்தது. 

85 அடி நீர்மட்டம் கொண்ட கடனாநதி அணையில் நீர்மட்டம் 78.20 அடியாகவும், நீர்வரத்து 501.10 கன அடியாகவும், வெளியேற்றம் 10 கன அடியாகவும் இருந்தது. 84 அடி நீர்மட்டம் கொண்ட ராமநதி அணையில் நீர்மட்டம் 82 அடியாகவும் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் 113.85 கன அடியாகவும் இருந்தது. 
72 அடி நீர்மட்டம் கொண்ட கருப்பாநதி அணையில் 67.59 அடியாகவும் நீர்வரத்து 58 கன அடியாக இருந்தது. 36.10 அடி நீர்மட்டம் கொண்ட குண்டாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியதையடுத்து அணைக்கு வரும் 39 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 132 அடிநீர்மட்டம் கொண்ட அடவிநயினார் அணையில் நீர்மட்டம் 127.50 அடியாகவும் நீர்வரத்து 82 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com