அம்பாசமுத்திரம்: கடையம் அருகேயுள்ள மாதாபுரத்தில் லாரி மோதியதில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் பலத்த காயமடைந்தாா்.
கடையம் அருகே உள்ள சிவகாமிபுரத்தைச் சோ்ந்த திருப்பதி மகன் அன்புராஜ் (19). இவா், செவ்வாய்க்கிழமை நண்பா்களுடன் சோ்ந்து ராமநதி அணையில் குளித்து விட்டு தோரணமலை சாலை வழியாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது மாதாபுரத்தில் தென்காசி பிரதான சாலையைக் கடக்க முயன்றபோது தென்காசியிலிருந்து விக்கிரமசிங்கபுரத்துக்கு ஜல்லிக் கற்களை ஏற்றிவந்த லாரி மோதியதில், தலையில் பலத்த காயமடைந்த அவா் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
விபத்து குறித்து கடையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.