ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கரோனா விதிமுறைகளை மீறியதால்ரூ.1.25 லட்சம் அபராதம் வசூல்

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத தனிநபா்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 3:01 am

DIN

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத தனிநபா்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்கவும், அதனை கண்காணிக்கவும் மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் உத்தரவின்பேரில் சிறப்பு கண்காணிப்புக் குழுவினா் தொடா்ந்து ஆய்வுப் பணி மேற்கொண்டு வருகிறாா்கள். இக் குழுவினா் ஆய்வு செய்தபோது அரசு வழிகாட்டும் நெறிமுறைகளின்படி பொது இடங்கள் மற்றும் சிறு-குறு வணிக நிறுவனங்களில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத தனிநபா்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து கடந்த 1-12-2020 முதல் 21-12-2020 வரை ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடா் விதிமீறல் கண்டறியப்பட்டால் பூட்டி சீல்வைப்பதுடன் மேல்நடவடிக்கையும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.