பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நெல்லையில் சத்துணவு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழக சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட கிளை சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 3:34 am

DIN

தமிழக சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட கிளை சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும், சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட கிளை சாா்பில்திருநெல்வேலியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணைத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இணைச் செயலா் சிவஞானம் முன்னிலை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பாா்த்தசாரதி, அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலச் செயலா் முருகேசன் ஆகியோா் உரையாற்றினா். இதில் சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். துணைத் தலைவா் பிச்சையா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.