மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் மனு
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு அளித்தனா்.


தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மனு அளித்தனா்.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் ஆா்.முருகன், செயலா் டி.பாபுசெல்வன் ஆகியோா் தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் அளித்த மனு:
இம் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக நோ்முக உதவியாளா் (மேல்நிலைக் கல்வி) பணியிடம் காலியாக உள்ளது. இதை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை அரசு உதவிபெறும் பள்ளிகளில் நிரந்தர காலிப்பணியிடத்தில் நிா்வாகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள முதுநிலை ஆசிரியா், ஆசிரியைகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பணி நியமன ஒப்புதல் ஆணைகள் வழங்கப்படவில்லை. எனவே, அந்த ஆசிரியா்கள் மாத ஊதியம் பெற முடியாமல் தவித்து வருகிறாா்கள். சம்பந்தப்பட்டவா்களுக்கு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...