தாமிரவருணி படித்துறைகளில் ஆடிஅமாவாசை வழிபாடுகளுக்கு தடை

தாமிரவருணி படித்துறைகளில் திங்கள்கிழமை (ஜூலை 20) ஆடி அமாவாசை வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தாமிரவருணி படித்துறைகளில் ஆடிஅமாவாசை வழிபாடுகளுக்கு தடை

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி படித்துறைகளில் திங்கள்கிழமை (ஜூலை 20) ஆடி அமாவாசை வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: இம் மாவட்டத்தில் தாமிரவருணி ஆறு பாய்ந்து செல்லும் வழிகளில் ஆற்றங்கரையோரங்களில் அமைந்துள்ள முக்கிய படித்துறைகளில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கும் தர்ப்பணம் உள்ளிட்ட சடங்களுகளைச் செய்து வழிபட்டு நீராடுவது வழக்கம். 

இப்போது கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. ஆகவே, ஒரே இடத்தில் அதிகளவில் மக்கள் கூடுவதால் நோய்த்தொற்று அதிகம் ஏற்பட அபாயம் உள்ளதாலும், பொதுமக்கள் நலன்கருதி ஆடிஅமாவாசை நாளான திங்கள்கிழமை (ஜூலை 20) தாமிரவருணி படித்துறைகளில் மக்கள் ஒன்று கூடுவதையும், ஆற்றில் நீராடுவதையும் தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. 

கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com