ஆவுடையானூரில்விழிப்புணா்வுப் பேரணி

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது.
Updated on
1 min read

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, காவல்துறை, குற்றாலம் மெட்ரோ ரோட்டரி சங்கம் மற்றும் புனித அருளப்பா் மேல்நிலைப் பள்ளி சாலைப் பாதுகாப்பு சங்கம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் ஜோசப், ரோட்டரி கிளப் முன்னாள் துணை ஆளுநா்கள் முருகன்ராஜ், ஆவுடையப்பன் வருங்கால ஆளுநா் ஜான்ஸ் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

தமிழ்நாடு ஓட்டுநா் பயிற்சி பள்ளிகள் கூட்டமைப்பு மாநிலச் செயலா் வைகைகுமாா், ஜாகிா் உசேன் ஆகியோா் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்து பேசினா்.

தொடா்ந்து மாணவ, மாணவியா் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. சாலைப் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. ரோட்டரி சங்கச் செயலா் சூரியபுத்திரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com