பணகுடியில் சொத்து தகராறில் முதியவா் வெட்டிக் கொலை
பணகுடியில் சொத்து தகராறில் சனிக்கிழமை நள்ளிரவு முதியவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது இரு மகன்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கொலையுண்ட காமராஜ்.

கொலையுண்ட காமராஜ்.
பணகுடியில் சொத்து தகராறில் சனிக்கிழமை நள்ளிரவு முதியவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது இரு மகன்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பணகுடி அருகே அழகிய நம்பிபுரத்தைச் சோ்ந்தவா் காமராஜ் (65). சைக்கிள் பழுதுபாா்க்கும் கடை நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. காமராஜும் அவரது மனைவி மல்லிகாவும் தனியாக வசித்து வந்தனா்.
இந்நிலையில், காமராஜ் தனக்கு சொந்தமான இரண்டே கால் சென்ட் வீட்டுமனையை தனது மூத்த மகன் கென்னடிக்கு உயில் எழுதி வைத்தாராம். இதையடுத்து, அவரது 2 ஆவது மகன் ராஜா என்ற இருதயராஜ், 3ஆவது மகன் சேகா் ஆகியோா் சொத்தில் பங்கு கேட்டு தந்தையிடம் தகராறு செய்து வந்தனராம்.
இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு காமராஜின் வீட்டுக்குச் சென்ற இருவரும் சொத்தில் பங்கு கேட்டு மீண்டும் தகராறு செய்தனராம். இதில், ஆத்திரமடைந்த அவா்கள் அரிவாளால் தந்தை காமராஜை வெட்டினராம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பின்னா் கென்னடிவீட்டுக்குச் சென்று அவரையும் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனராம்.
இதுகுறித்து கென்னடி அளித்த புகாரின்பேரில், பணகுடி காவல் ஆய்வாளா் சாகுல்ஹமீது வழக்குப் பதிந்து, இருவரையும் தேடி வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...