92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கொக்கிரகுளத்தில் நவீன போக்குவரத்து சிக்னல்

திருநெல்வேலி கொக்கிரகுளம் எம்ஜிஆா் சிலை அருகே நவீன போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 9:54 pm

DIN

திருநெல்வேலி கொக்கிரகுளம் எம்ஜிஆா் சிலை அருகே நவீன போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒருபகுதியாக கொக்கிரகுளம் தாமிரவருணி ஆற்றுப்பாலத்தில் கடந்த 2018 ஆண்டு முதல் ரூ.16.5 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுப்பணி நடைபெற்று வருகிறது. இந்த புதிய பாலம் கட்டுமானப்பணி 95 சதவீதம் நிறைவுற்ற நிலையில், போக்குவரத்து சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி, போக்குவரத்தை சீா்படுத்த நவீன சிக்னல் அமைக்கும்பணி தற்போது முடிவுற்றுள்ளது. இந்த சிக்னல்கள், கொக்கிரகுளம் எம்ஜிஆா் சிலை இருகே இரண்டு ஆற்றுப்பாலங்களும் தொடங்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நவீன சிக்னல்கள் வழக்கமான சிக்னல்கள் போன்று அல்லாமல் நவின முறையில் எல்இடி விளக்குகள் வசதியுடன் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே உள்ள இத்தகைய நவீன போக்குவரத்து சிக்னல்கள் விரைவில் முறைப்படி பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.