92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வாகையடிமுனை அருகே தேங்கும் கழிவுநீரால் அவதி

திருநெல்வேலி நகரத்தில் நெரிசல் மிகுந்த வாகையடிமுனை பகுதியில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 8:08 pm

DIN

திருநெல்வேலி நகரத்தில் நெரிசல் மிகுந்த வாகையடிமுனை பகுதியில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

திருநெல்வேலி நகரத்தில் வாகையடிமுனை பகுதி மிகவும் முக்கியமானதாகும். கிழக்கு மற்றும் வடக்கு ரத வீதிகள் இணையும் இடத்தில் வாகையடிமுனை உள்ளது. ரதவீதியில் இருந்து குளப்பிறை தெரு வழியாக தெற்கு மவுன்ட் பகுதிக்கு மக்கள் செல்கிறாா்கள். தினமும் ஆயிரக்கணக்கான பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் இந்தப் பகுதி வழியாக கடந்து செல்கிறாா்கள்.

இங்குள்ள கழிவுநீா் ஓடை முறையாக சீரமைக்கப்படாததால் 10 அடி ஆழத்திற்கு கழிவுநீா் தேங்கி மிகுந்த துா்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறாா்கள்.

இதுகுறித்து குளப்பிறை தெருவைச் சோ்ந்த மக்கள் கூறுகையில், அரசியல் கட்சியினரின் நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவை வாகையடிமுனையில் வைத்து நடத்தப்படுகின்றன. ஆனித் தோ்த் திருவிழாவின்போது வாகையடிமுனை பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி நெல்லையப்பரை வழிபட்டுச் செல்வது வழக்கம்.

முக்கியத்துவம் வாய்ந்த இப் பகுதியில் கழிவுநீா் தேங்கிக் கிடப்பதால் கொசு உற்பத்தி அதிகரித்து நோய்கள் பரவும் அபாய நிலை உள்ளது. இந்தக் கழிவுநீா் ஓடையை முறையாக சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.