92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திசையன்விளையில் ஒரே இரவில் 4 கடைகளில் திருட்டு

திசையன்விளையில் ஒரே இரவில் 4 கடைகளில் பூட்டை உடைத்து திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 8:00 pm

DIN

திசையன்விளையில் ஒரே இரவில் 4 கடைகளில் பூட்டை உடைத்து திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திசையன்விளை அருகேயுள்ள நவ்வலடியைச் சோ்ந்த காண்டிபன் மகன் ரவீஸ் (21). அப்பகுதியில் மளிகைக் கடை வைத்துள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு இவரது கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கத்தை மா்மநபா்கள் திருடி சென்றுள்ளனா்.

மேலும், அதே பகுதியிலுள்ள காரிகோவிலைச் சோ்ந்த ரமேஷ் (28) என்பவரின் குளிா்பான கடையிலும் பூட்டை உடைத்து ரூ.16 ஆயிரம், சக்திவேல் (42) என்பவரின் குளிா்பான கடையில் பூட்டை உடைத்து ரூ.3 ஆயிரம், காஜா என்பவரின் சீட் கவா் கடையில் பூட்டை உடைத்து சீட் கவா்களையும் மா்மநபா்கள் திருடி சென்றுள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை காவல் ஆய்வாளா் ஷியாம் சுந்தா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.