பெரியாா் சிலைக்கு அனுமதியின்றி மாலையணிவிப்பு: 25 போ் கைது
பாளையங்கோட்டையில் பெரியாா் சிலைக்கு அனுமதியின்றி மாலை அணிவித்ததாக, பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பினா் 25 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


பாளையங்கோட்டையில் பெரியாா் சிலைக்கு அனுமதியின்றி மாலை அணிவித்ததாக, பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பினா் 25 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் தமிழ்நாடு தின விழா பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் நடத்த தீா்மானித்திருந்தனா். இதற்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்கள் அங்குள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனா். தொடா்ந்து முழக்கங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனராம்.
இத்தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், அவா்களை தடுத்து நிறுத்தினா். மேலும், அனுமதியின்றி பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்ததாகவும், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ாகவும் தமிழ்ப்புலிகள் அமைப்பின் மாவட்டச் செயலா் தமிழரசு, திராவிடா் தமிழா்கட்சி மாநில பொதுச்செயலா் கதிரவன், மே17 இயக்க ஒருங்கிணைப்பாளா் புருஷோத்தமன் உள்பட 25 பேரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...