92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அம்பையில் புதிய நீதிமன்றக் கட்டடம் திறப்பு

அம்பாசமுத்திரத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் திறப்பு விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

News image

திறப்புவிழாவை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள புதிய நீதிமன்றக் கட்டடம்.

Updated On :5 நவம்பர் 2020, 2:32 pm

DIN

அம்பாசமுத்திரத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் திறப்பு விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

அம்பாசமுத்திரத்தில் 100 ஆண்டுகள் பழைமையான கட்டடத்தில் நீதிமன்றங்கள் செயல்பட்டு வந்தன. இவற்றை அகற்றி புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து 2017ஆம் ஆண்டு ஜூலையில் ரூ. 7.23 கோடி மதிப்பில் பழைய கட்டடத்தை இடித்து புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டும் பணி தொடங்கியது. கட்டடப் பணிகள் முழுமையடைந்த நிலையில் அக்.22 இல் புதிய நீதிமன்றக் கட்டடத்தைப் பார்வையிட்ட சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அம்ரீஸ்வர் பிரதாப் ஷாகி விரைவில் நீதிமன்றம் இந்தக் கட்டடத்தில் செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். 

இதையடுத்து காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி அம்ரீஸ்வர் பிரதாப் ஷாகி புதிய நீதிமன்றக் கட்டத்தை திறந்து வைத்தார். இதையடுத்து அம்பாசமுத்திரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிவெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. 

Story image

பங்கேற்ற நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்கள். 

நிகழ்ச்சியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி இளையராஜா, அம்பாசமுத்திரம் சார்பு நீதிமன்ற நீதிபதி கவிதா, அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், வள்ளியூர் சார்பு நீதிமன்ற நீதிபதி மாயகிருஷ்ணன், திருநெல்வேலி சட்டப்பணிகள் ஆணைக்குழு வர்சித் குமார், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் கந்தசாமி, செயலர் ராமராஜ்பாண்டியன், அட்வகேட் அசோசியேசன் செல்வ அந்தோணி, செயலர் சுரேஷ், வழக்காடும் வழக்குரைஞர்கள் நலச்சங்கத் தலைவர் ராஜேந்திரன், செயலர் ராஜாங்கம், அரசு வழக்குரைஞர் கோமதிசங்கர், முன்னாள் அரசு வழக்குரைஞர் குமார் மற்றும் வழக்குரைஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.