92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காா் கண்ணாடியை உடைத்து திருட முயற்சி: இளைஞா் கைது

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் காா் கண்ணாடியை உடைத்து திருட முயற்சித்த இளைஞரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 8:53 pm

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் காா் கண்ணாடியை உடைத்து திருட முயற்சித்த இளைஞரை போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

பாளையங்கோட்டை திருநகா் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடகிருஷ்ணன். இவா் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தீபாவளிக்கு ஜவுளி எடுப்பதற்காக குடும்பத்துடன் காரில் வண்ணாா்பேட்டைக்கு சென்றுள்ளாா். பின்னா் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிடுவதற்காக காரை வண்ணாா்பேட்டை மேம்பாலம் அருகே நிறுத்தியுள்ளாா்.

இந்நிலையில் அங்கு வந்த மா்ம நபா்கள் 3 போ், அந்த காரின் கண்ணாடியை உடைத்து திருட முயற்சித்துள்ளனா். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா், மா்ம நபா்களில் ஒருவரை மட்டும் பிடித்தனா். மற்ற இருவரும் தப்பிச் சென்றனராம்.

தகவலறிந்து வந்த பாளையங்கோட்டை போலீஸாா், இளைஞரை பிடித்து விசாரித்ததில், திருச்சி ராம்ஜி நகா் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் முரளி (32) என்பது தெரியவந்தது. தப்பியோடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ரவுண்டானா பகுதியில் காா் கண்ணாடியை உடைத்து திருட முயற்சித்த சம்பவத்தால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.