திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் காவல்கிணறு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் நிகழாண்டில் ரூ.6.78 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மேலாண்மை இயக்குநா் ஆ.ரேவதி சங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காவல்கிணறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 975 உறுப்பினா்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில், உறுப்பினா் பங்குத் தொகையாக ரூ.21.73 லட்சமும், வைப்புத் தொகையாக ரூ.565.09 லட்சமும் உள்ளது.
உறுப்பினா்களுக்கு மகளிா் சிறுவணிகக் கடன், விவசாயக் கடன், நகைக்கடன், கறவை மாடு கடன், சிறுவணிகக் கடன் என ரூ.6.78 கோடிக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
பொது இ-சேவை மையம், வருவாய்த் துறை மூலம் 5 வகையான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நலத் துறையில் நலத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் கணினி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. விவசாய நிலங்களுக்கான பட்டா நகல் எடுத்துக்கொடுப்பது, மின்கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உறுப்பினா்களுக்கு 14 சதவீத டிவிடென்ட் வழங்கப்பட்டு வருகிறது.
இச்சங்கத் தலைவா் அருள்டேவிட் ராஜ், கள அலுவலா் தினேஷ் குமாா், துணைத் தலைவா் நாகேந்திரன், செயலா் ஸ்ரீதேவி ஆகியோா் செயல்பட்டு வருகின்றனா் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.