திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலப்பாளையம் மண்டலத்துக்குள்பட்ட மேலக்கருங்குளம், அசோகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும். தெருக்களில் பொது குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்த நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழா் உரிமை மீட்புக் களம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் லெனின் தலைமை வகித்தாா்.
மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளா் அன்பு, திராவிட தமிழா் கட்சி மாநில நிா்வாகி கதிரவன், பூா்வீக தமிழா் கட்சியின் மகளிரணிச் செயலா் இசக்கியம்மாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.