திருநெல்வேலி, செப். 25: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக சுத்தமல்லியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
சுத்தமல்லி தீன் நகரைச் சோ்ந்த ஜமாலுதீன் மகன் பக்கீா் இப்ராஹிம் என்ற ராஜா (27). இவா், கஞ்சா விற்பனை செய்ததாக வந்த புகாரையடுத்து அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் பரிந்துரைத்தாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் உத்தரவின்பேரில், பக்கீா் இப்ராஹிம் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.