

வள்ளியூா், செப். 25: ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில், விலையில்லா முகக் கவசங்கள் வழங்கும் திட்ட தொடக்கவிழா தெற்குவள்ளியூா் ரேஷன் கடையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.எஸ்.இன்பதுரை தலைமை வகித்து, விலையில்லா முகக் கவசங்களை வழங்கி திட்டத்தை தொடங்கிவைத்தாா். வட்ட வழங்கல் அதிகாரி பழனி முன்னிலை வகித்தாா்.
அதிமுக ஒன்றியச் செயலா்கள் ராதாபுரம் அந்தோணி அமலராஜா, வள்ளியூா் இ.அழகானந்தம், நான்குனேரி-வள்ளியூா் வட்டார வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவா் முருகேசன், வள்ளியூா் கூட்டுறவு சங்கத் தலைவா் சங்கா், துணைத் தலைவா் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.