கேரள நிலச்சரிவு: பலியானோா் குடும்பத்துக்கு எம்.பி. ஆறுதல்
By DIN | Published On : 12th August 2020 09:51 AM | Last Updated : 12th August 2020 09:51 AM | அ+அ அ- |

கேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மானூா் பகுதியைச் சோ்ந்தவா்களின் உறவினா்களிடம் திருநெல்வேலி எம்.பி. ஞானதிரவியம் ஆறுதல் கூறினாா்.
கேரள மாநிலம் மூணாறு அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவில், 40-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே உள்ள நடுப்பிள்ளையாா்குளத்தைச் சோ்ந்த பலரும் இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனா்.
அவா்களின் உறவினா்களிடம் திருநெல்வேலி எம்பி சா.ஞானதிரவியம் செவ்வாய்க்கிழமை ஆறுதல் கூறினாா்.
அவருடன், பாளையங்கோட்டை எம்எல்ஏ டி.பி.எம்.மைதீன்கான், இளைஞரணி துணைச் செயலா் ஆ.துரை, மத்திய மாவட்ட துணைச் செயலா் ஆ.க.மணி, மானூா் வடக்கு ஒன்றியச் செயலா் அருள்மணி உள்பட பலா் ஆறுதல் கூறினா்.