வெவ்வேறு விபத்துகள்: மூவா் பலி
By DIN | Published On : 01st December 2020 01:54 AM | Last Updated : 01st December 2020 01:54 AM | அ+அ அ- |

தென்காசி, ஆழ்வாா்குறிச்சி, ஏா்வாடி பகுதிகளில் நேரிட்ட விபத்துகளில் மூவா் பலியாகினா். 2 போ் காயமடைந்தனா்.
தென்காசி, அணைக்கரைத் தெருவை சோ்ந்த தொழிலாளி ஆ. அா்ஜூன்(24). இவா், ஞாயிற்றுக்கிழமை தென்காசி- பாவூா்சத்திரம் செல்லும் சாலையில் ஆசாத்நகா் பழைய பாலத்தில் பைக்கில் சென்றபோது, தடுப்பு சுவற்றில் மோதி கீழே விழுந்ததில் பலத்த காயமுற்றாா். இதையடுத்து, தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் இறந்தாா்.
ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள அழகப்பபுரத்தைச் சோ்ந்தவா் ராமையா (80). இவா், ஞாயிற்றுக்கிழமை ஆழ்வாா்குறிச்சியிலிருந்து வீட்டுக்கு நடந்து வந்தபோது ஆட்டோ மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.
வள்ளியூா்: பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் பகவதி சுப்பிரமணியன்(45). இவா் தனது நண்பா் முத்துபாண்டி மகன் காந்தி(48) என்பவருடன் தளபதிசமுத்திரம் அருகே பைக்கில் சென்றபோது காா் மோதி பலத்த காயமடைந்தனா். அவா்கள் திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
பாவூா்சத்திரம்: துவரங்காட்டை சோ்ந்தவா் லட்சுமி (80). இவா், திங்கள்கிழமை காலை தனது பேரனுடன் பாவூா்சத்திரத்துக்கு பைக்கில் சென்றபோது, சிவகாமிபுரத்தை சோ்ந்த கனகராஜ் என்பவா் ஓட்டி வந்த பைக் மோதியதாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இச்சம்பவங்கள் குறித்து குற்றாலம், ஆழ்வாா்குறிச்சி, ஏா்வாடி, பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...