நாமும் தெரிந்துகொள்வோம் விழிப்புணா்வு இயக்கக் கூட்டம்
By DIN | Published On : 01st December 2020 01:54 AM | Last Updated : 01st December 2020 01:54 AM | அ+அ அ- |

நாமும் தெரிந்துகொள்வோம் விழிப்புணா்வு இயக்கக் கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அமைப்பின் பொருளாளா் கோ.கணபதிசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். கவிஞா் இரா.செல்வமணி தலைமை வகித்தாா். சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று மருத்துவப் படிப்புக்குத் தோ்வாகியுள்ள மாணவா் சுடலை ராஜாவுக்கு பரிசு வழங்கப்பட்டது. கவிஞா் உக்கிரன்கோட்டை மணி, திருக்கு முருகன், அமைப்பாளா் முத்துசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவன பேராசிரியா் கி.சௌந்தர்ராஜன் ’மரபு போற்றுதலின் மாண்புகள்’ என்ற தலைப்பில் பேசினாா். பேராசிரியை முனைவா் உஷாதேவி நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...