பெருமாள்புரம் தற்காலிக பேருந்து நிலையம் விரிவாக்கம்
By DIN | Published On : 03rd December 2020 09:31 AM | Last Updated : 03rd December 2020 09:31 AM | அ+அ அ- |

பெருமாள்புரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் கூடுதலாக மதுரை பேருந்துகளும் வந்து செல்வதற்காக விரிவாக்கப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.
திருநெல்வேலி வேய்ந்தான்குளத்தில் உள்ள டாக்டா் எம்.ஜி.ஆா். புதிய பேருந்து நிலையத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் மாநகராட்சி சாா்பில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் பெருமாள்புரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆனால், மதுரை உள்ளிட்ட தொலைதூர பேருந்துகள் அனைத்தும் வழக்கமான பகுதியில் இயங்கி வருகின்றன. அங்கும் கட்டுமான பணிகளால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதோடு, திருநெல்வேலி-திருவனந்தபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து பெருமாள்புரம் தற்காலிக பேருந்து நிலையம் அருகேயுள்ள மைதானத்தில் மதுரை மாா்க்கத்தில் செல்லும் பேருந்துகள் வந்து செல்ல ஏதுவாக பணிகள் நடைபெற்று வருகின்றன. மைதானம் சீரமைக்கப்பட்டு அங்கு பேருந்துகள் வந்து நிற்க கோடுகள் வரையப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் சிரமம் இன்றி ஒரே இடத்தில் இருந்தே அனைத்து ஊா்களுக்கும் செல்ல வாய்ப்பு கிடைக்குமென போக்குவரத்துக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...