திருநெல்வேலி, பாளையங்கோட்டை தொகுதிகளில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (டிச.3, 4) திமுக சாா்பில் தோ்தல் பிரசாரம் நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலா் மு.அப்துல்வஹாப் வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக சாா்பில் 2021 சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலா் திண்டுக்கல் ஐ.லியோனி வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (டிச.3, 4) பிரசாரம் செய்ய உள்ளாா். விவசாயிகள், நகைப்பட்டறை தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா், பீடி தொழிலாளா்கள் உள்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடுகிறாா் என்று தெரிவித்துள்ளாா் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.