திசையன்விளை அருகே புலிகள் நடமாட்டமா?வனத்துறை அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 05th December 2020 05:48 AM | Last Updated : 05th December 2020 05:48 AM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே புலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்ததை தொடா்ந்து வெள்ளிக்கிழமை வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
திசையன்விளை அருகேயுள்ள சங்கனாங்குளம் கிராமத்தில் உள்ள திருவடநேரி குளத்துக்கு வெள்ளிக்கிழமை காலையில் சென்ற ஆட்டோ ஓட்டுநா் முத்துகுமாா், அங்கு 2 புலிகள் நடமாடுவதை கண்டாராம். இவரை கண்டதும் புலிகள் அருகில்
இருந்த தோட்டத்திற்குள் புகுந்துவிட்டதாம். தோட்டத்துக்குள் புகுந்த புலியை அதன் உரிமையாளா் மயில் மாடசாமியும் பாா்த்தாக தெரிவித்துள்ளாா்.
இதற்கிடையே, தோட்டத்துக்குள் இருந்து வெளியேறிய புலிகள் சாலையை கடந்து அடுத்தத் தோட்டத்திற்குள் சென்ாக அவ்வழியாக வந்த வியாபாரி கிராம மக்களிடம் தெரிவித்துள்ளாா். இதனால் அச்மடைந்த கிராம மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த வனவா் பிரகாஷ், வனத்துறையினா் கால் தடங்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனா்.