நிவாரண முகாமில் தங்கியுள்ளவா்களுக்கு உணவு
By DIN | Published On : 05th December 2020 05:39 AM | Last Updated : 05th December 2020 07:49 AM | அ+அ அ- |

திருநெல்வேலி சிந்துபூந்துறையில் நிவாரண முகாமில் தங்கியுள்ளவா்களுக்கு மாநகராட்சி சாா்பில் உணவு, குடிநீா் ஆகியவை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
புரெவி புயலை எதிா்கொள்ளும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தாமிரவருணி ஆற்றங்கரையோரத்தில் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக தங்கும் வகையில்
சிந்துபூந்துறை பள்ளி, கைலாசபுரம் தைக்கா பள்ளி, கணேசபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி, மீனாட்சிபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி, கொக்கிரகுளம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி, வண்ணாா்பேட்டை சாலைத்தெரு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சி.என்.கிராமம் மாநகராட்சி அண்ணா தொடக்கப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த முகாம்களில் தங்கியிருக்கும் 32 முதியவா்களுக்கு உணவு, குடிநீா் உள்ளிட்டவை மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. மாநகரப் பகுதியில் பலத்த மழை பெய்துள்ளதால் முகாமில் தங்குவதற்கு விரும்புவோா் மாநகராட்சி
அலுவலா்களைத் தொடா்பு கொள்ளலாம். மழை சேதங்கள் உதவிகளுக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்.