கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்
By DIN | Published On : 15th December 2020 02:05 AM | Last Updated : 15th December 2020 02:05 AM | அ+அ அ- |

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது.
கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த இரு அணு உலைகள் மூலமாக இரண்டாயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த இரு அணு உலைகளிலும் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்படுவதும் பின்னா் கோளாறு சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்குவதும் வழக்கமாக நிகழ்ந்து வருகிறது. இந்நிைலையில், முதலாவது அணு உலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து, அணு உலையில் திங்கள்கிழமை முற்பகல் 11.15 மணிக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கோளாறு சரி செய்யப்பட்டதும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என அணு மின் நிலைய வட்டாரத்தில் தெரிவித்தனா். மேலும் தற்போது இரண்டாவது அணு உலையில் 980 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.