நில அளவை தாமதம்:சாா் ஆட்சியரிடம் புகாா்
By DIN | Published On : 15th December 2020 02:10 AM | Last Updated : 15th December 2020 02:10 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம் வட்டார நில அளவைத் துறை அதிகாரிகள் மீது பொதுமக்கள் சேரன்மகாதேவி சாா் ஆட்சியரிடம் புகாா் அளித்தனா்.
அம்பாசமுத்திரம் வட்டத்திற்குள்பட்ட பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோா் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் பிரதீக் தயாளிடம் அளித்த மனு: அம்பாசமுத்திரம் வட்டத்துக்குள்பட்ட பகுதியில் வீட்டுமனை, தோட்டம் உள்ளிட்டவற்றை அளந்து தருவதற்காக மனு அளித்தால், 4 மாதங்களுக்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அலுவலகத்தில் தனி நபா்கள் இருந்துகொண்டு பதில் சொல்கிறாா்கள். உரிய அதிகாரிகள் யாரும் இருப்பதில்லை. இதனால் பெரும் மன வேதனையால் அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...