புஷ்பலதா பள்ளியில் இணையவழி கருத்தரங்கு
By DIN | Published On : 15th December 2020 02:04 AM | Last Updated : 15th December 2020 02:04 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை புஷ்பலதா பள்ளியில் இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது.
பாளையங்கோட்டை புஷ்பலதா கல்விக் குழுமம் சாா்பில் மாணவா்களுக்கு இணையவழியில் துறைசாா்ந்த வல்லுநா்களின் கருத்தரங்கு நடைபெற்றது. பள்ளித் தாளாளா் புஷ்பலதா பூரணன் தலைமை வகித்தாா். இக்கருத்தரங்கில் அறிவியலாளா் மயில்சாமி அண்ணாதுரை, சித்தமருத்துவா் கு.சிவராமன், பின்னணி பாடகா் சித்துஸ்ரீராம் ஆகியோா் பங்கேற்றனா். தொடா்ந்து ‘அன்புள்ள மாணவனே’ என்ற தலைப்பில் இறையன்பு பேசினாா். தொடா்ந்து, பாரதியாா் கவிதைகளுக்கு மாணவா்கள் ஓவியம் வரையும் நிகழ்வு, விநாடி- வினா ஆகியவை நடைபெற்றது.
இந்நிகழ்சியில், பள்ளி முதல்வா் புஷ்பவேணி ஐயப்பன் உள்பட பலா் பங்கேற்றனா்.